அரும்புகள் என்னும் சிறுவர் உளநலப் பிரிவு 2022ஆம் ஆண்டு தைப்பிறப்புடன் ஆரம்பமானது. இதன் முக்கிய பணிகள் யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படுகின்றது. இதன் நோக்கம் சிறார்களை அவர்களின் நிலையிலிருந்து புரிந்து கொண்டு அவர்களின் ஆற்றலை மேம்படுத்தலும், வலுப்படுத்தலும் ஆகும். இம்முறை சிறுவர்களைப் பலவீனப்படுத்தி சிகிச்சைக்குட்படுத்துகின்ற வழக்கமான அணுகுமுறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. குழந்தைகளின் ஆற்றலை மேம்படுத்துவதென்பது அவர்களுடன் மட்டும் சார்ந்த விடயமல்ல. பெற்றோர்களினதும் ஆசிரியர்களினதும் பங்களிப்பு இங்கு முக்கியமானதாக அவதானிக்கப்படுகின்றது. எனவே தான் நாம் மூன்று தரப்பினருடனும் இணைந்து செயற்படுவதனை அடிப்படையாகக் கொண்டுள்ளோம். இம்மூன்று தரப்பினரதும் குறைகளை நிபந்தனையற்று கேட்டு அவர்களிடையே புரிந்துணர்வினை ஏற்படுத்தி அதன் மையமாக இருக்கும் சிறுவர்களை பாதுகாக்க தலைப்படுகின்றோம்.