தேர்த்திருவிழாவுக்கு செல்ல சேலை வாங்கித் தராததால் மாணவி தற்கொலை
(வீரகேசரி (12.06.18) அன்று வெளியான செய்தி பின்வருமாறு அமைந்திருந்தது.)
யாழ்ப்பாணத்தில் ஆலயத் தேர்த் திருவிழாவுக்குச் செல்ல சேலை வாங்கித்தராததால்
விரக்தியடைந்த 18 வயதான மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார்
தெரிவித்தனர். கொடிகாமம் எருவனில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம்
இடம்பெற்றுள்ளது. வரணிசிட்டிவேரம் கண்ணகை அம்பாள் ஆலயத்தின் தேர்த்திருவிழா
சனிக்கிழமை நடைபெற்றது. சக தோழிகள் சேலையுடன் வருவதால் தனக்கு சேலை வாங்கித்
தருமாறு தாயாரிடம் கேட்டுள்ளார். எனினும் அதற்கு தாயார் மறுத்ததனால் மாணவி
திருவிழாவுக்குச் செல்லவில்லை.
நேற்று முன் தினம் வீட்டிலுள்ளவர்கள் கோவிலுக்கு சென்றிருந்த வேளையில்,
விரக்தியடைந்த மாணவி தற்கொலை செய்துள்ளதாக விசாரணைகளின் மூலம்
தெரியவந்துள்ளது.
ஆலயத்திலிருந்து வீடு திரும்பிய குடும்பத்தினர் மாணவி தவறான முடிவெடுத்துள்ளமை
கண்டு அதிர்ச்சியடைந்து கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
பொலிஸார் அங்கு வந்து சடலத்தை மீட்டு சாவகச்சேரி மருத்துவ மனை சவச்சாலையில்
ஒப்படைத்தனர்
இந்தச் சம்பவங்கள் போலல்லாது பல சம்பவங்கள் நித்தமும் செய்தித் தாள்களிலும் மற்றைய
ஊடகங்களிலும் காணப்படுகின்றன. இதனைவிட தற்கொலை முயற்சிகள் பெருமளவில்
காணப்படுகின்றன. இவர்களில் பெரும்பாலானவர்கள் இளையர் என்றால் மிகையாகாது.
குறிப்பாக 10 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்டவர்களாhகக் காணப் படுகின்றனர்.
மேற்குறிப்பிட்ட சம்பவத்தில்; மாணவிக்கு மனநோய் இருப்பதற்கான சாத்திக்கூறு மிகவும்
குறைவாகவே உள்ளது. ஒரு வித உணர்ச்சி மேலீட்டுடன் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை
நடத்தைக் கோலம் (ளுரiஉனையட டீநாயஎழைரச) என்பதே சாலப் பொருத்தமாகும். இதில் தனியே
மாணவியை மட்டும் குற்றம் சாட்டுவதாக அமையாது பெற்றோர்களின்; பிரச்சினையைக்
கையாளத் தெரியாத நிலைமையே பிரதானமான காரணமாக அமைகிறது. இத்தகைய
முடிவுகளுக்கு பல காரணிகள் பின்புலமாக இருக்கின்ற போதிலும் உணர்ச்சிகளைக் கையாளத்
தெரியாத நிலைமையே பிரதானமான காரணமாக அமைகிறது.
இத்தகைய தற்கொலை நடத்தைகள் உயிரை மாய்த்துக் கொள்கிறது என்பதனை விட ஒரு
வித உதவிகோரும் நிலை (உசல கழச ய hநடி) என்பதே பொருத்தமாகும். இங்கு அந்த மாணவி
இறந்து விட்டது என்பது துர்ப்;பாக்கிய நிலையேயாகும். பெரும்பாலும் தற்கொலை முயற்சிகளில்
அவர்கள் தங்களைக் காப்பாற்றும் படி கூறுவதை அவதானிக்கலாம். எனவே ஒரு நெருக்கடி
நிலையை கையாளத் தெரியாத நிலையிலேயே இத்தகைய சம்பவங்கள் இடம் பெறுகின்றன.
மனநோயினால் திட்டமிட்டு உயிரை மாய்த்துக் கொள்ளும் தற்கொலை முயற்சிகள்
இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட விடயமாகும்.
இந்த சிறுமியருக்கு மனநோய் இல்லாத போதும் நல்ல மனநலம் பெற்றிருக்கவில்லை எனத்
தோன்றுகிறது. ஒரு ஆரோக்கியமான மனநலத்தைப் பெற்றிருப்பவர்கள் இத்தகைய நிலைக்குச்
செல்லமாட் டார்கள். ஏனெனில் இங்கு தற்கொலைக்குத் தூண்டியதாகக் கருதப்படும் சம்பவம்
என்பது ஒவ்வொரு நாளும் குடும்பங்களினுள் நிகழுகின்ற விடயமே அதற்காக எல்லோரும்
தற்கொலைக்கு முயற்சி செய்வ தில்லையே….. எனவே இந்த சம்பவத்திலிருந்து இளையர்
மனநலம் பற்றியும் விரிவாகப் புரிந்து கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது.
இத்தகைய தற்கொலை முயற்சிகளுக்குப் பல காரணிகள் இட்டுச் செல்கின்றன. உயிரியல்,
மற்றும் ஆளுமைக் காரணிகள் பிரதான பங்குவகிக்கின்றன. இளையரின் சிந்தனைப்
பிறழ்வுகளும் இதற்குக் காரணமாக அமைந்துள்ளன. இவற்றை விட உளச்சமூகக் காரணிகளும்
தாக்கம் செலுத்துகின்றன. பல ஆய்வுகள் மூலம் நிரூபணமான உளச்சமூகக் காரணிகள்.
1. தாழ்ந்த சமூக பொருளாதார நிலை – Social deprivation
2. ஆரோக்கியமற்ற குடும்பநிலை – Family adversity
3. பாதகமான வாழ்க்கை நிகழ்வுகள் – Negative life events
4. நபரிடை ஆற்றல்கள் – Interpersonal factors
5. உளவியல் காரணிகள் – Psychological factors
மேற்குறிப்பிட்ட காரணிகளில் உடனடியாக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அல்லது தலையீடு
மூலம் சீர் செய்யக்கூடிய காரணிகளுள் முக்கிய மானவையாக ஆரோக்கியமற்ற குடும்பநிலையும்
மனவளம் குன்றிய திறன்களற்ற நிலையுமே காரணமாக அமைகின்றன. இத்தகைய தற்கொலை
முயற்சிகளைக் குறைப்பதற்கு மேற்குறிப்பிட்ட காரணி களைச் சீர்செய்வதன் மூலமே
சாத்தியமாகும். இவற்றை விரிவாக ஆராய்வதன் மூலம் எதிர்காலத்தில் இத்தகைய
நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
குடும்பம்
ஒரு குழந்தையின் பாதுகாப்பான இருப்பிடம் குடும்பமே தன்னுடைய தேவைகளைப்
பெற்றுகொண்டு வளர்ச்சி அடைந்து கொள்வதுடன் பல விடயங்களில் விருத்தி அடைகிறது.
விருத்தியென்பது பல விடயங்களில் நடைபெறுகின்றது. முக்கியமாக உணர்ச்சி, சிந்தனை,
மொழி விருத்தி என்பவற்றுடன் விழுமிய விருத்தி போன்றவற்றையும் பெற்றுக்கொள்கிறது.
விருத்தியின் தொடர்ச்சியாக பல விடயங்களில் தேர்ச்சி அடைகின்றது. இவ்வாறு
பருவத்திற்கேற்ப விருத்தி தேர்ச்சி நிலைகளைக் காணும் குழந்தை மகிழ்ச்சியாக வாழக் கற்றுக்
கொள்கின்றது.
இத்தகைய நிலைக்கு சிறுவயதில் பெற்றோர்கள் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது. அதில்
பிரதானமானவற்றை இங்கு குறிப்பிடுகின்றேன்.
1. பெற்றோர் – குழந்தை பிணைப்பு – Parent – child attachment
பிறந்த சில மாதங்களில் குழந்தையானது தாயுடன் விN~டமாக பிணைப்பினை ஏற்படுத்திக்
கொள்கிறது. இப்பிணைப்புக் காலமானது ஓரிரு வருடங்களில் பூரணத்துவம் அடைகின்றது.
சரியான அரவணைப் பினைக் கொடுக்கும் போது இது பாதுகாப்;பான பிணைப்பாக அமைகிறது.
இதே போல் தந்தைக்கும் பிள்ளைக்கும் இடையிலும் பிணைப்பு ஏற்படுகிறது. இதுவே
மிகமுக்கியமான பிள்ளையின் உணர்ச்சி நடத்தைக் கோலங்களை தீர்மானிக்கின்றது.
ஆரோக்கியமான பெற்றோர் குழந்தை பிணைப்பு என்பது இத்தகைய தற்கொலை
முயற்சிகளில் இருந்து இளையர்களைப் பாதுகாக்கின்றது என ஆய்வுகள் மூலம்
கண்டறிப்பட்டுள்ளது.
இத்தகைய ஆரோக்கியமான பிணைப்பினை ஏற்படுத்துவதில் தாக்கம் செலுத்தக்கூடிய
காரணிகளை ஆராய்வோமாயின் முக மலர்ச்சியுடன் தாய் உறவு கொள்ளல், தரமான நேரத்தைச்
செலவிடல், முறையாக தேவைகளைப் பூர்த்தி செய்தல், முறையான தூண்டல் செயற்பாடுகளை
மேற்கொள்ளல் என்பன அமையப் பெறுகின்றன. இவற்றையெல்லாம் தாய் செய்வதற்குரிய
குடும்பச் சூழல் இன்றியமை யாததாகும். கணவன் மனைவிக்கிடையே சுமூகமான உறவு ஏற்படும்
பட்சத்திலே இவை சாத்தியமாகும். இது ஒரு முக்கிய விடயமாக விவாதிக்கப்படுகிறது. எனவே
இத்தகைய தற்கொலை முயற்சிகளைத் தடுப்பதில் பெற்றோர்- குழந்தைக்கு இடையிலான
பிணைப்பே பிரதான காரணியாக அமைந்துள்ளது. இதனை எமது பெற்றோர் ஆரம்பமுதலே
கருத்;தில் கொள்ளும் போது பல விபரீதங்களைத் தடுக்க முடியும். பெற்றோர்கள் சாதகமான
குழந்தை வளர்ப்பினைக் கைக்கொள்ள வேண்டியது மிக முக்கியமானதாக அமைந்துள்ளது.
2. பாதகமான வாழ்க்கை நிகழ்வுகள்
குழந்தைப் பருவத்தில் ஏற்படும் பாதகமான வாழ்க்கை நிகழ்வுகள் குழந்தையின் உணர்ச்சி|
சிந்தனைகளில் மாற்றத்தினை ஏற்படுத்தக் கூடியவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆரம்பப்
பருவத்தில் ஏற்படுகின்ற பாதகமான நிகழ்வுகளாயினும் சரி சமீபத்தில் ஏற்படுத்தப் பட்ட
நிகழ்வுகளாயினும் சரி இதற்கு வழிகோலுகின்றன. இப் பருவத்தினருக்கு ஏற்படும் பாதகமான
நிகழ்வுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்படுகின்றன. துஷ்பிரயோகங்கள் நேரடியான
பாதகமான விளைவுகளையும் பெற்றோருக்கிடையான சண்டை சச்சரவுகள், தகப்பனாரின்
மதுபானம் மறைமுகமாக பாதகமான நிகழ்வுகளாகவும் அமைந்துவிடுகின்றன.
இத்தகைய பாதகமான வாழ்க்கை நிகழ்வுகளுக்கு முகம் கொடுத்துள்ள இளையோர்
தற்கொலைக்கு அதிகளவில் முயன்றுள்ளமை பல ஆய்வுகள் மூலம் கண்டறிப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக சிறு பராயத்தில் துஷ்பிரயோகங்களுக்கு உட்பட்டு மனவடுக்களைச்
சுமப்பவர்கள் இத்தகைய நிலைக்குச் செல்கின்றார்கள். வெறுமனே துஷ்பிரயோகங்களும்
பாலியல் ரீதியானது மட்டுமல்ல உடல் ரீதியான துன்புறுத்தல்களும் அதனைவிட உணர்ச்சி
துஷ்பிரயோகங்களும் இவற்றில் அமைந்து விடுகின்றன. குழந்தைகளை அடித்துத் துன்புறுத்து
வதும் வன்சொற்கள் மற்றும் கேவலமாக வார்த்தைகளால் காயப் படுத்தலும் இதற்குள்
அடங்குகின்றன. இத்தகைய செயற்பாடுகளைத் தவிர்த்து குழந்தைகளை அவர்களின்
பருவத்தினூடாகப் புரிந்து கொண்டு அவர்களைக் கையாளும் போது இத்தகைய பாதிப்புக்கள்
தவிர்க்கப்படுகின்றன. பெற்றோர்கள் குழந்தைகளை து~;பிரயோகங் களுக்கு உட்படாமல்
பாதுகாப்பதுடன் வெளியாட்கள் மற்றும் உறவினர் களாலும் அவர்கள் துஷ்பிரயோகத்திற்கு
உட்படாமல் பாதுகாக்க வேண்டியது அவர்களுடைய தலையாய கடமையாகும். பெரும்பாலும்
பாலியல் துஷ்பிரயோகங்கள் நெருங்கிய உறவினர்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றது என்பது
இங்கு கவனத்தில் கொள்ளப்பட்ட வேண்டியது. எனவே குழந்தைகளினது உடல் உளப்
பாதுகாப்பினை உறுதிசெய்வது என்பது பெற்றோரின் கடமையாகும். பாதுகாப்பு என்ற
போர்வையுள் அடக்குமுறைகளையும் அடாவடித்தனங்களையும் பெற்றோர்கள் மேற்கொள்வது
பெரும் தவறு. ஏனெனில் அவையுமே து~;பிரயோகங்கள் தான் என்பதை மறத்தலாகாது.
ஆரம்பகாலப் பாதிப்புகளைத் தடுப்பதும் தாங்கு திறமைகளை வளர்த்துக் கொள்வதும்
இப்பாதிப்புக்களிலிருந்து விடுபடுவதற்குரிய மார்க்கங்களாகும்.
3. நெருக்கீடுகளுக்கு முகம் கொடுத்தல்
இன்றைய சிறார்கள் பலவகையான நெருக்கீடுகளுக்கு முகம் கொடுக் கின்றமையைக் காணலாம்.
போட்டியான கல்விச்செயற்பாடுகள் மன நெருக்கீடுகளைத் தருகின்றன. அதைவிடவும்
குடும்பத்தின் பொருளாதார நிலைகாரணமாக தாயும் தகப்பனும் வேலைக்குச் செல்வதாலும்
சிறார்கள் பல நெருக்கீடுகளை எதிர்கொள்கின்றார்கள். அதிலும் குறிப்பாகக் கட்டிளமைப்
பருவத்தினர் மேலும் பல நெருக்கீடுகளுக்கு முகம் கொடுக்கின்றனர். இத்தகைய
நெருக்கீடுகளுக்கு அதிகளவில் முகம் கொடுப்பவர்கள் தற்கொலை முயற்சிக்குச்
செல்கின்றார்கள் என்பது கண்டறிப்பட்டுள்ளது,
இன்றைய இளம் பருவத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பல. அதுவும் கட்டிளமைப்
பருவத்தினர் முக்கியமாக பலவித பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். பெற்றோரின்
எதிர்பார்ப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றது. எந்த விதத்திலும் தோற்றுப் போகாமல்
வெற்றிபெற்றிட வேண்டும். என்ற நெருக்கடிக்குள் தள்ளப்படுகின்றனர். வாழ்க்கையின் சகல
மட்டங்களிலும் வெற்றிபெற வலியுறுத்தப்படுகின்றனர். இத்தகைய நிலையில் கட்டிளமைப்
பருவத்தினரும் யதார்த்தமற்ற இலக்குகளைத் தம்முள் கொண்டு அல்லல்ப்படுவதையும்
காணலாம். தங்களைத் தோற்றவர்களாகக் கருதி தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர்.
அடுத்தது அவர்கள் தங்கள் நண்பர்கள் ஏற்படுத்துகின்ற பிரச்சினைகளுக்கு முகம்
கொடுக்கின்றார்கள். பலர் பாடசாலை சக மாணவர்களின் கிண்டல்கள் கேலிகளுக்கு
உட்படுவதனால் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அதேபோல் இன்னும் சிலர் தமது
சகோதர்களுடன் முரண்பட்டு பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். எனவே இங்கு
நபரிடையே தொடர்பாடல் என்பதால் பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால் தாங்கள்
தோற்றவர்களாகவும் மற்றவர்களுடைய செயற்பாடு களுக்குக் கட்டுப்பட்டுப் போனவர்களாகவும்
உணரத் தலைப்படுகின்றனர்.
இதனைவிடவும் கட்டிளமைப்பருவத்தில் எதிர்ப்பால் கவர்ச்சி காரணமாக காதல் வயப்படுதல்
இன்னுமொரு பிரச்சினையாக உருவெடுக்கின்றது. நெருக்கமான உறவுகளை ஏற்படுத்த வேண்டும்
என்ற உந்துதல் இத்தகைய நிலைக்கு இப்பருவத்தினரைக் கொண்டு செல்லுகின்றது. அதற்கு
சமூக மற்றும் குடும்ப அங்கீகாரம் கிடைக்கப் பெறாமையினால் அல்லலுற்று இந்தப்
பிரச்சினையைக் கையாளத் தெரியாமல் தவிக்கின்றனர்.
இதனைவிடவும் குடும்பம் என்ற அமைப்பினுள் பல நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.
பெற்றோருடைய முரண்பாடுகள் இவர்களைப் பெரிதும் பாதிக்கின்றது. அத்துடன் பெற்றோருடன்
கடுமையாகத் தர்க்கம் செய்யும் நிலை தோன்றுகின்றபோதும் பாதிக்கப்படுகின்றனர்.
பெற்றோர்களின் பொருளாதார நிலையில் ஏற்படும் மாற்றங்களும் கட்டிளமைப்பருவத்தினரைப்
பாதிக்கின்றது. அதைவிட பெற்றோர்களின் மருத்துவ நிலை மனநோய்கள் என்பனவும் தாக்கம்
செலுத்துகின்றன. மதுபாவனைக்கு உட்பட்ட தகப்பனால் ஏற்படும் நெருக்கடியானது பெரியளவில்
தாக்கம் செலுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
சமூகத்துடன் ஏற்படும் இணக்கப்பாடானது இந்தப் பருவத்தினருக்கு முக்கியமானதாகக்
கருதப்படுகின்றது. சமூக இணைப்புக்களை ஏற்படுத்துவதில் நிறைய சிக்கலை எதிர்கொள்வதாகக்
கண்டறியப் பட்டுள்ளது. அதுவும் இன்றைய இப்பருவத்தினர் சமூக வலைத்தளங்களில் அதிக
ஈடுபாட்டினைக் காட்டுவதால் மனிதர்களுடன் ஏற்படுத்தும் இணைப்புக்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுமூகமான இணக்கப் பாடான இணைப்பினை ஏற்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.
இதனால் சமூகமே தங்களுக்கு எதிராக செயற்படுவதாக எண்ணத் தலைப்பட்டு அக
நெருக்கடிகளுள் அகப்பட்டுக் கொள்கின்றனர். உலகமும் இவர்களைப் பற்றிய எதிர்மறையான
விமர்சனப் போக்கினைக் கைக் கொள்வதும் இத்தகைய பருவத்தினரைப் பாதிக்கச் செய்கின்றது.
4. உளவியல் காரணிகள்
இளையர் பலர் இன்றை சமூகத்தில் தங்களைப் பற்றி தாழ்ந்த கணிப்பினைக் கொண்டிருப்பது
மிக முக்கியமான உளவியல் பிரச்சினையாக அமைந்துள்ளது. அதிக விமர்சனங்களுக்கு
உட்படுவதும் பெற்றோர் ஆசிரியர்களால் அவர்களது செயற்பாடுகள் தாழ்த்தி விமர்சிக்கப்
படுவதும் இத்தகைய உளவியல் பிரச்சினைக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. சிலர்
இயல்பாகவே தாழ்ந்த தற்கணிப்பினைக் கொண்டுள்ளனர். தங்களைப் பற்றிய சரியான
கணிப்பினை மேற் கொள்ளத் தவறும் பட்சத்தில் அது அவர்களுக்கு தாழ்வுமனப் பான்மையை
ஏற்படுத்தி விடுகின்றது. இதனால் அவர்கள் தங்களையே வெறுக்கக் கற்றுக் கொள்கிறார்கள்.
தங்களையே ஏற்றுக் கொள்ளாதவர் களால் பிறரை ஏற்றுக் கொள்ள முடியாமல் போகிறது.
அடுத்த மிகமுக்கியமான உளவியல் காரணி அதிகம் உணர்ச்சிவசப் படுதல். நிதானம்
இழந்து திடிரென உணர்ச்சிவசப்படும் நிலைமை பெருமளவில் இப்பருவத்தினர்களிடம்
காணப்படுகிறது. இதனால் பலர் தற்கொலை முயற்சிக்குச் செல்கின்ற நிலைமை தோன்றுகின்றது.
இப்பருவத்தினர் பலர் தற்கொலை செய்து கொண்ட விடயங்களை ஆராய்வோமாயின் அவை
உடனடி உணர்ச்சிக் கொதிநிலையில் எடுத்த மோசமான முடிவாக அமைந்துள்ளதைக் காணலாம்.
சிறுபிள்ளைகள் அடம்பிடிக்கும் போது பெற்றோர் சரியாக கையாளாத
நிலை அவர்கள் உணர்ச்சிவசப் படுவதற்கும் விரும்பியதெல்லாம் கிடைத்திட வேண்டும் என்ற
எண்ணத்தையும் விதைத்துவிடுகிறது. விரும்பியது கிடைக்காதவிடத்து அவர்கள் உணர்ச்சிக்
கொதிநிலையில் மனமுடைந்து தற்கொலை முயற்சிகளுக்குச் செல்கின்றனர். எனவே உணர்ச்சி
வசப்படுதல் நிலையில் இருந்து தம்மை மாற்றிக்கொள்வதற்குரிய வழிமுறைகளைக் கற்றுக்
கொள்வது என்பது இன்றைய காலத்தின் தவிர்க்க முடியாத தேவையாகியுள்ளது.
நம்பிக்கை அற்று வாழும் நிலையும் பெருமளவில் இத்தகைய தற்கொலை முயற்சிகளுக்கு
வழிவகுக்கின்றன. எதிர்காலம் பற்றிய நம்பிக்கை தாங்கள் தங்களில் நம்பிக்கை கொள்ளல்
என்பன இப் பருவத்தினரிடம் குறைந்து காணப்படுகின்ற போது அவை இத்தகைய முறையற்ற
நடத்தைகளுக்கு வழிகோலுகின்றன. அத்துடன் தங்களைத் தாங்களே பாரமானவர்களாக எடுத்துக்
கொள்கின்ற மனநிலையும் காணப்படுகின்றது. மற்றவர்கள் தங்களது கருத்துக்களை
செவிமடுக்காது தாழ்த்திப் பதில் உரைக்கும் போது இப்பருவத்தினர் சமூகம் தங்களுக்கு எதிராக
செயற்படுவதாகக் கருதிக் கொண்டு நம்பிக்கையை இழக் கின்றனர். சமூகத்தில்
இப்பருவத்தினருக்கான நம்பிக்கை தரும் சந்தர்ப்பங்கள் உருவாக்கப்படாமல் இருக்கும் போது
அவர்கள் எதிர் காலம் பற்றிய நம்பிக்கையை இப்பருவத்தினரிடம் விதைக்காவிட்டால்
தற்கொலை முயற்சிகள் மட்டும் அல்லாமல் வன்முறைகளும் அதிகரித்துச் செல்வதற்குக்
காரணமாக அமைந்து விடுகிறது. சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழும் நிலையையும்
நம்பிக்கையின்மையையும் தோற்று விக்கின்றது. நவீன அலைபேசிகளுடன் மட்டுமே இணைப்பை
ஏற்படுத்திக் கொண்டு தனி மனிதனை முதன்மைப்படுத்திக் கொண்டு தனிமைப்பட்டு வாழ்கின்ற
இன்றைய இளையோரின் நிலைமையும் நம்பிக்கையின்மைக்கு பெருமளவு வித்திடுகின்றது. சமூக
இணைப்பு பலமாகக் காணப்படுகின்றவர்கள தங்களுடைய பிரச்சினைகளை ஆரோக்கியமாக
எதிர்கொள்வதற்கு வழிவகுக்கிறது எனக் கண்டறியப் பட்டுள்ளது. எனவே சமூகத்துடன்
ஆரோக்கியமான இணைப்பை ஏற்படுத்திய ஒரு சமூக வலைப்பின்னல் உருவாகும் போதுதான்
இப்பருவத்தினர் பாதுகாப்பாக உணரத் தலைப்படுவதுடன் எதிர்காலத்தில் நம்பிக்கை கொள்ளவும்
முற்படுவர்.
கட்டிளiமைப் பருவம்
கட்டிளமைப் பருவம் என்பது விரைவான விருத்தியுடன் புதிய கற்றல் களுடன் அனுபவங்களைப்
பெறுகின்ற ஒரு காலமாகும். அதனுடன் தனிப்பட்ட அடையாளத்தையும் அகண்ட சுதந்திரத்தையும்
அனுபவிக்கத் தொடங்குகின்ற காலமாகும். இக்காலப் பகுதியில் பல மனநலப் பிரச்சினைகள்
ஆரம்பமாகின்றதும். போதைப் பொருட்களுக்கு அடிமை யாகும் சந்தர்ப்பம் அதிகரிக்கப்படும்
காலமாகும்.
முற்றுமுழுதாகப் பெற்றோரில் தங்கி இருந்த குழந்தைப் பருவம், பிள்ளைப் பருவம்
இவற்றினைக் கடந்து முற்று முழுதாகத் தங்களில் தங்கி வாழ்கின்ற பெரியவர்களாக
மாறுமுன்னர் ஏற்படுகின்ற இடைக் காலப்பகுதி இந்தப் பருவமாகும். இந்தப் பருவத்தில்
குடும்பம் என்ற பாதுகாப்பான நிறுவனத்தில் இருந்து தான் வெளியே செல்ல வேண்டி வரும்
என்பதையும் தான் தனக்கு என்று ஒரு தொழில் செய்து அந்த வருமானத்தில் வாழ வேண்டும்
என்ற எதிர்கால யதார்த்தத்தையும் மெல்ல மெல்லப் புரியத் தொடங்குகின்றனர். இந்தப் புரிதல்
அவர் களுக்குள் பயம், அச்சம் போன்றவற்றை உருவாக்குகின்றது. இதனால் இவர்கள் ஒரு வித
பதகளிப்புக்கு உட்படுகிறார்கள் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். இதைவிட
இந்தப் பருவத்தை உணர்ச்சிக் குழப்பமான பருவம் என வர்ணிப்பது தேவையற்றது.
இந்தப் பருவத்தினை ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் ஒரு வன்முறை சார்ந்த
ஒழுக்கமற்ற பருவத்தினர் எனத் தேவையற்றுக் காட்ட முற்படுவது ஆரோக்கியமற்றது. இதனால்
அவர்களுக்குள் தங்களைப் பற்றிய பிழையான உருவகத்தைத் தந்து நிலைமையை
மோசமடையச் செய்கின்றனர்.
இந்த வயதில் பாலியல் ரீதியான வளர்ச்சி, விருத்தி மாற்றங்கள் விரைவாக ஏற்படுகிறது.
பௌதிக ரீதியில் மட்டுமன்றி உளவியல் ரீதியாகவும் இது பல மாற்றங்களைக் கொண்டு
வருகின்றது. எதிர்ப்பாலாருடன் கவர்ச்சி நிலை ஏற்படுவதும் பாலியல் மாற்றங்களைப் புரிந்து
கொள்ளாமல் அச்சப்படுவதும் சில சந்தர்ப்பங்களில் இந்த மாற்றங்களினால் பாலியல் உணர்ச்சி
மேலிட்டுக் காணப்படுதலையும் அவதானிக்கலாம். இந்தக் காலப் பகுதியில் இனப்பெருக்க
சுகாதாரம் மற்றும் பாலியல் அறிவினை வழங்குவது ஆரோக்கியமானதே.
அடுத்த முக்கியமான மாற்றம் சம வயதுக் குழுக்களை ஏற்படுத்திக் கொள்ளுதல். இந்தக்
காலப்பகுதியில் சக மாணவர்கள், நண்பர்கள் மிக முக்கியமான வகிபங்குக்காரர்களாகவும்
தாக்கத்தைச் செலுத்துபவர் களாகவும் அமையப் பெறுவர். இந்தக் குழுச்சேர்க்கை இக்காலப்
பகுதியில் தேவையானதும் ஆரோக்கியமானதுமே ஆகும். நல்ல குழுச் சேர்க்கையை நாம்
ஆதரிக்காவிட்டால் தேவையற்ற தீய குழுச் சேர்க்கையை அவர்கள் அமைத்துக் கொள்கின்ற
நிலைமையே ஏற்படும்.
இந்தக் காலப்பகுதியில் தங்களைப் பற்றிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்
கொள்கின்றார்கள். தாங்கள் யார்? தங்களுடைய வாழ்க்கைக்கு என்ன வேண்டும்? என்பவற்றை
அறிந்து கொள்கிறார்கள். கருத்துருவாக்கல், நம்பிக்கைகள் என்பன உருவாக்கப்படுகின்றன.
நீண்ட கால நோக்கு, தீர்க்க தரிசனம், எதிர்காலத்திற்குரிய வழிமுறை கள், மாற்று வழிகள்
என்பன பற்றிச் சிந்திக்கத் தலைப்படுகின்றனர். அத்துடன் அவர்கள் பெரியவர்களாக நடந்து
கொள்ள நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். ஆனால் முழுமையாக அப்படி நடந்து கொள்வது
கடினமென்பதும் அத்தகைய நிலையில் உதவிகள் தேவைப்படுகின்றன என்பதுமே யதார்த்தம்.
பாலியல் ரீதியான வகிபாகம் உணரப்பட்டு அதனூடு கலாசார விழுமியங்களை
ஏற்றுக்கொள்கின்ற மனப்பக்கு வத்தையும் அடைகின்றனர்.
பிள்ளைப் பருவத்தில் மற்றவர்களினால் உருவமைக்கப்பட்ட சட்ட திட்டங்களுக்குக் கீழ்
இயங்கியவர்கள் இந்தப் பருவத்தில் தங்களுக்குரிய சட்டதிட்டங்களை ஏற்படுத்திக்
கொள்கின்றனர். அவர்கள் தங்களுடைய சுதந்திரமான செயற்பாட்டிற்கு விளைகிறார்கள். இது
ஒரு முரண்பாட்டு நிலைமையைக் குடும்பத்தில் தோற்றினாலும், ஆரோக்கியமானதே. ஒரு
விதமான சட்ட திட்டங்களுக்கும் அமைவாக நடக்கத் தலைப்படாததை ஏற்றுக்கொள்ள முடியாது
தான். ஆனால் அவர்களது நிலைப்பாட்டைப் புரிந்து கொள்வது அவசியமானது.
நடத்தைக் கோல மாற்றங்கள் பெருமளவில் அவதானிக்கப்படும் பருவம் இதுவே. பரீட்சை,
காதல், முரண்பாடுகள் என பல நெருக்கீடு களுக்கு முகம் கொடுப்பதனால் இந்தக் காலப்
பகுதியில் பிறழ்வு நடத்தைகள் வெளிப்படுவதற்குரிய ஏது நிலை காணப்படுகின்றது.
இதனைப் புரிந்து கொண்டு பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஒருவித தோழமையுடன்
அணுகினால் இப்பிரச்சினையில் அவர்களை அதிகாரத்துடன் கட்டுப்படுத்தாமல் ஆரோக்கியமாகக்
கையாளமுடியும்.
கட்டிளமைப் பருவத்தினர் வளர்ந்த மனிதர்களின் உடல் நிறையில் 50மூத்தினை அடைந்து
விடுவார் கட்டிளமைப் பருவ முடிவில் சிறுவர்கள் பெரியவர்களின் அரைவாசி பருமனைப்
பெற்றுக் கொள்கிறார்கள். அத்துடன் இனப்பெருக்க ஆற்றலையும் பெற்றுக் கொள்வதுடன்
மூளையில் பெரியளவில் விரைவான மாற்றங்கள் ஏற்படுகின்றன. மூளையில் ஏற்படுகின்ற இந்த
சடுதியான மாற்றங்கள் இப்பருவத்தில் மிகையான உணர்ச்சி மாற்றங்களுக்கு வித்திடுகின்றன.
இது சமூக, சிந்தனை, உணர்ச்சி விருத்திக்கு வழிகோலுகின்றது. இது தவிர கோபம், ஆக்ரோசம்
போன்ற உணர்ச்சிகளை ஏற்படுத்து வதற்காக அல்ல இந்த மாற்றங்கள், ஆனாலும் இத்தகைய
மாற்றங்கள் இப்பராயத்தினரது சமூக தொடர்பாடல்களுக்கு அத்தியாவசிமாக அமைகின்றன.
வெளியில் தெரிகின்ற உடல் வளர்ச்சியும் பாலியல் உருமாற்றங்களும் பெருமளவில்
அவதானிக்கப்பட்டாலும் மேலே குறிப்பிட்ட உள, அக மாற்றங்களும் பெருமளவில் கட்டிளமைப்
பருவத்தில் நடைபெறுகின்றன. ஆனாலும் முழுமையாக மூளை விருத்தியடைவதற்கு 25
வயதாகிறது என்பது ஆய்வின் மூலம் கண்டறியபட்டுள்ளது. இந்த முரண்பாடான விருத்தி
நிலைகளே அவர்களின் வளர்ச்சி மாற்றங்களுக்கு மற்றவர்களின் உதவி தேவைப் படக்
காரணமாகின்றது.
80களுக்கு முன்னைய ஆய்வுகள் பெருமளவு இத்தகைய விருத்தி வளர்ச்சி நிலைகளைப்
பற்றியதாகவே இருந்தது. ஆனால் அதன் பின் அவர்கள் வாழுகின்ற சூழல் சமூகம் சார்ந்ததாக
மாறியுள்ளது. அவர்களைச் சூழ உள்ள மனிதர்கள் அவர்களுக்கு ஏற்படுகின்ற அனுபவங்கள்
என்பனவும் அவர்களது சமூக, சிந்தனை, உணர்ச்சி விருத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன.
இவை முன்னுக்குப் பின்னாக விருத்தியடையலாம் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. வேலை
ஒன்றினைத் தேட வேண்டும், தனது வாழ்க்கைத் துணையைத் தேடுகின்ற செயற்பாட்டினை
இந்தப் பருவத்தில் மேற்கொள்ளத் தொடங்குகின்றனர். எமது பிரதேசத்தில் வேலை தேட
வேண்டும் என்ற பிரச்சினை பெருமளவில் ஏற்படாததனால் மற்றைய செயற்பாடுகள் அதிகளவில்
இடம்பெறுகின்றது. ஆபத்தான செயற்பாடுகளை மேற்கொள்ளும் நிலை இந்தப் பருவத்தில்
அதிகமாகக் காணப்படுகிறது.
இந்தக் கட்டிளமைப் பருவத்தினர் உலகத்திற்கு பிரயோசன மானவர்கள் என்பதை உணரச்
செய்வதும் அவர்களில் அன்பு செலுத்துவதும் அவர்களுக்கு ஆதரவாகவும் உலகில்
பெரியவர்கள் இருக்கின்றார்கள் என்பதனையும் விளங்கிக் கொள்ளச் செய்வதே இங்கு மிக
முக்கியமானதாகும். சவால்களுக்கு முகம் கொடுக்கின்ற உற்சாகமான சக்திமிக்க ஆக்கத்
திறன்களைக் கொண்ட இவர்கள் எமது சமூகத்தின் சொத்துக்கள்.
நேரான கட்டிளமைப் பருவ விருத்தி பல காரணிகளில் தங்கி யுள்ளது. அவை தனிப்பட்ட
அகக்காரணிகள் மற்றும் சூழலியல் சார்ந்த புறக் காரணிகள் என்பனவே.
தனிப்பட்ட அகக்காரணிகள்
சமூகத்திறன் மற்றும் உணர்ச்சித் திறன், உயர்வான தற்செயற்பாடு, நேரான தன் அடையாளம்,
வாழ்க்கையில் திருப்தி, ஆரோக்கியமான சமூக செயற்பாடுகள்.
சூழலியல் புறக்காரணிகள்
குடும்பம், பாடசாலை, சமூகம் சார்ந்த இணைப்புக்கள்.
கட்டிளமைப் பருவத்தின் ஆரோக்கியம்
மனிதனின் விருத்திப்பருவத்தின் இன்னுமொரு முக்கியமான காலப்பகுதியாகும். இங்கு
சடுதியான விரைவான வீச்சில் மாற்றங்கள் நடைபெறுகின்றன என்றால் மிகையாகது. மூளையின்
விருத்தி என்பது விரைவாக நடைபெறுகின்றது. இதனால் புதியவகை நடத்தைக் கோலங்களை
வெளிக்காட்டுகிற தன்மை ஏற்படுகின்றது. அதுமாத்திரமல்ல நிலைமையும் காணப்படுகின்றது. இத்தகைய
இயல்பான வாழ்க்கைப் போக்கின் மாற்றமானது குடும்பம், பாடசாலை, சமூகம் மற்றும்
நண்பர்கள் மட்டத்தில் தாக்கத்தினைச் செலுத்துகின்றன. இவர்களில் ஏற்படும் மாற்றங்கள்
அவர்களது நடத்தைக் கோலங்களைத் தீர்மானிக்கின்றன. இத்தகைய நடத்தைக் கோலங்கள்
இப்பருவத்தினரது ஆரோக்கியத்தில் தாக்கத்தைச் செலுத்துகின்றன. இப்பருவத்தினருடைய
ஆரோக்கியத்தில் தாக்கத்தைச் செலுத்துகின்ற காரணிகளை ஆராய்வோ மாயின் அவை இரண்டு
பிரதான கூறுகளைக் கொண்டிருக்கின்றன. ஒன்று கட்டமைப்பு சார்ந்த சமூகக் காரணிகள்
மற்றையது அண்மைய காரணிகளாக அமைகின்றன.
கட்டமைப்பு நிர்ணயக் காரணிகள்
இவை மிக முக்கியமான சமூக நிர்ணய காரணிகள் என்பது பல ஆய்வுத்தரவுகள் மூலம்
நிரூபணமாகியுள்ளது. அவையாவன நாட்டின் வளம், வருமான ஏற்றத்தாழ்வுகள் என்பனவற்றுடன்
கல்வி கற்பதற்குரிய சந்தர்ப்பம் என்பன அமைகின்றன. இதனை விட பாதுகாப்பான ஆதர வான
குடும்பம் அதேபோல் பாதுகாப்பான ஆதரவான பாடசாலைகள் முக்கியமானவையாகக்
காணப்படுகின்றன. அத்துடன் ஆரோக்கியமான ஒத்த வயது நண்பர்கள் ஆகிய காரணிகள்
கட்டிளமைப்பருவத்தினரின் முழுமையான வளர்ச்சி விருத்திக்கு அடிப்படையாக அமைகின்றன.
யுத்தம் போன்ற முரண்பாடுகள், பால் மற்றும் இனப்பாகுபாடு என்பனவும் இவற்றுள்
அடங்குகின்றன.
இடைக்கால அண்மைய நிர்ணய காரணிகள்
இவை நாளாந்த கட்டமைப்பு சாராத வாழ்க்கையில் அமைகின்ற அண்மைய நிர்ணயக்காரணிகள்
ஆகும். ஒருவருடைய வாழ்க்கைச் சூழல், தரமான நெருங்கிய உறவுகள் என்பன அமைகின்றன.
இவை கலாசார சமய சமூக காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன. குடும்ப மற்றும் பாடசாலைச்
சூழல் என்பன இதில் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனையும் விட அயலவர்கள்,
ஒத்தவயதுடையவர்கள் என்பனவற்றினால் ஏற்படுகின்ற சூழலும் இத்தகைய நிர்ணயக்
காரணிகளுக்குள் அடங்குகின்றன. இளமைப்பருவத்தினரது ஆரோக்கியம் சார்ந்த நடத்தைக்
கோலங்களும் இதில் அமைப்பெற்றுள்ளது. எனவே இளமைப்பருவத்தினரது ஆரோக்கியம்
என்பது தனிமனித, குடும்ப, சமூக, மற்றும் தேசிய காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன.
எனவே கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் பாடசாலை செல்வதற்கான
சந்தர்ப்பத்தையும் அதன்பின் தொழில் வாய்ப்பிற்கான சந்தர்ப்பத்தையும் வழங்கமுடியுமானால்
அது இப்பருவத்தினர்களில் ஆரோக்கியத்தினை மேம்படுத்துகின்றது.
கட்டிளமைப் பருவத்தின் முக்கியமான பிரச்சினைகள்
1. பாடசாலை இடை விலகல், கல்வி கற்றுக் கொள்ளவதில் இருந்து விலகுதல்.
2. சமூகத்திற்கு ஏற்புடையதல்லாத நடவடிக்கைகள், வன்முறை செயற்பாடுகள்.
3. தனிமை, மனச்சோர்வு மற்றும் தற்கொலை.
4. போதைப் பொருள் பாவனை, பாலியல் நடவடிக்கைகள்.
5. வேலை வாய்ப்பின்மை.
கட்டிளமைப் பருவத்தினரது தாங்கு திறனை அதிகரிக்கின்ற காரணிகள்
1. பராமரிப்பாளர் ஒருவருடன் (பெற்றோர், மற்றைய நெருங்கிய உறவுகள்) ஆரோக்கியமான
உறவு நிலை பேணப்படல்.
2. ஆத்மீக ரீதியான பற்றுதலுடன் சமய அனு~;டானங்களில் ஈடுபடல்.
3. உயர்வான யதார்த்த பூர்வமான கல்வி சார்ந்த எதிர்பார்ப்புக்களும் பாடசாலையில் அதற்கான
ஆதரவும்.
4. சாதகமான குடும்பச்சூழல், மலர்ச்சியான குழந்தை வளர்ப்பு முறைகள், எல்லைகள்
வரையறுக்கப்பட்ட சுதந்திரமாக வளர்வதற் குரிய வெளியை ஏற்படுத்தல்.
5. நெருக்கீடுகளுக்கு முகங்கொடுக்கும் ஆற்றலும் உணர்ச்சிகளைக் கையாளும் திறன்களும்.
பெரும்பாலான குடும்பங்கள் இந்தப் பருவத்தினை வெற்றிகர மாகக் கையாளுகின்றன. சில
பெற்றோர்கள், பராமரிப்பாளர்கள் முன்பே ஏற்படுத்திக் கொண்ட எதிர்மறையான
கருதுகோள்களினால் கட்டிளமைப் பருவத்தினருடன் தேவையற்ற முரண்படுகளை ஏற்படுத்திக்
கொள்கின்றனர். அவர்களின் பருவத்தின் மாற்றங்களை அது எற்படுத்துகின்ற உணர்ச்சி,
சிந்தனை, நடத்தை மாற்றங்களைப் புரிந்து கொண்டு கையாண்டால் இப்பருவமும்
சுவாரசியமானதும் மகிழ்ச்சியானதுமான வளர்ச்சிப் பருவமே.
கட்டிளைப்பருவத்தினருக்கு எவ்வாறு உதவலாம்
1. பூப்பெய்தல் பற்றியும் அதன் உடற்றொழிலியல் மாற்றங்களைப் பற்றியும் அறிமுகப்படுத்த
வேண்டும். இதனை 8 அல்லது 9 வயதில் ஆரம்பிக்கலாம்.
2. அவர்களது உருவங்கள், தோற்றங்கள் பற்றிய ஆதங்கங்களை கவனமாகச் செவிமடுத்தல்.
அவர்களின் உடல் அமைப்பு பற்றிய எண்ணமே அவர்களைப் பற்றிய முழுமையான
எண்ணத்திற்கு வித்திடுகின்றது.
3. அவர்களுடைய பயங்கள், உணர்ச்சிகளை, வெளிப்படுத்துவதற்கு வழிகோலுதல்
அத்தியாவசியமானது. நெருக்கீடுகளின் போது ஏற்படும் உடற் செயற்பாட்டு மாற்றங்களை
அவர்களுக்குப் புரியவைத்தல்.
4. அவர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் போது அவதானமாக செவிமடுக்கவும். முந்திக்
கொண்டே புத்திமதிகளைச் சொல்ல வேண்டாம். அதிலும் இவை தேவையில்லாத
உணர்வுகள் என நிராகரிக்க வேண்டாம்.
5. அவர்கள் தங்களின் வயதுக்கு மேற்பட்டவர்களுடன் சேர்வதைத் தவிர்த்து தங்கள் வயதினை
ஒத்தவர்களுடன் சேர்ந்து பழகுவதற்கு ஊக்குவிக்க வேண்டும்.
6. உடல்ரீதியாக அவர்கள் வளர்ச்சி பெற்றாலும் சிந்தனை ரீதியாக இன்னும் அவர்கள் முதிர்ச்சி
அடைய வேண்டும் என்பதை அவர்களுக்கு உணர்த்துவதுடன் அவர்கள் பெரியவர்கள்
போன்று செயற்பட முடியாமையையும் விளக்குதல் வேண்டும்.
மனச்சுகம்
மனச்சுகம் அல்லது மன ஆரோக்கியம் என்பது மனநோய்கள் அற்ற நிலை ஆக
இருக்கமுடியாது. மனநோய்கள் காணப்படாத ஒருவருடைய மன ஆரோக்கியம் மிக உன்னதமாக
இருக்க வேண்டும் எனக் கருதமுடியாது. அதேபோல் மன நோய்க்கு உட்பட்டவரும் தனது
ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்பதும் யதார்த்தமாகும்.
மன ஆரோக்கியம் என்பது ஒரு சிக்கலானதும் ஒரு மாற்றமடையாத நிலை என்பதிலும்
பார்க்க மாற்றமடையக் கூடியதும் மேம்படுத்தக் கூடியதுமான நிலை என்பதே பொருத்தமானது
ஆகும்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் வரைவிலக்கணப்;படி மனநலம் என்பது ஒரு ஆரோக்கியமான
நன்நிலை என்பதும் அது ஒருவருடைய திறமைகளையும் ஆற்றல்களையும் உணர்ந்து சாதாரண
நெருக்கடிகள் ஏற்படும் போது அதனை எதிர்கொண்டு உபயோகமுள்ளவராக வேலை பார்த்துக்
கொண்டு தனது சமூகத்திற்கு பிரயோசனமுள்ளவராக வாழ்வதனைக் குறித்து நிற்கின்றது.
மன ஆரோக்கியத்தின் கூறுகளாவன.
- தன்னக நன்நலம்
- தன்னக செயற்பாட்டுத் திறன்
- சுயமான செயற்பாடு
- திறன்களின் தேர்ச்சி
- உணர்ச்சி மற்றும் புத்திஜீவித்துவ ஆற்றல்கள்
என்பன கொள்ளப்படுகின்றன.
எனவே மனநலம் என்பது உணர்ச்சி, உள மற்றும் சமூக நன்நலம் என்றால் மிகையாகாது. அதன்
உள்ளடக்கமாக ஒருவர் தன்னைப் பற்றி எவ்வாறு உணர்கிறார் என்பதுடன் மற்றவர்களுடன்
தரமான உறவுகளைப் பேணக்கூடியவராக இருக்கின்ற நிலைமையையும் உள்ளடக்குகின்றது.
அதனையும் விட நெருக்கீடுகளைக் கையாளுகின்ற திறமை மற்றும் தெரிவுகளை ஏற்படுத்துகின்ற
ஆற்றல் என்பனவற்றையும் உள்ளடக்குகின்றது.
ஒரு மனிதனின் படிமுறை வளர்ச்சியின் வெவ்வேறு படிகளிலும் மன ஆரோக்கியம் என்பது
முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒருவன் எவ்வாறு சிந்திக்கின்றான், எவ்வாறு உணருகின்றான்
எவ்வாறு நிலைமைகளைக் கையாள்கிறான் என்பதைக் கொண்டே அவனது மனஆரோக்கியம்
உன்னதமானதாக அமையமுடியும் மொத்தத்தில் எவ்வாறு அவன் மற்றவர்களுடன்
இணைக்கப்படுகின்றான் என்பதிலேயே தங்கியுள்ளது.
மனநலம் என்பது ஒவ்வொருவருடைய அன்றாட வாழ்க்கையின் தரத்தினை நிர்ணயிப்பதுடன்
உறவுமுறை, உடல்நலம் என்பதை தீர்மானிக்கிற விடயமாகவும் அமைந்துள்ளது. எனவே மனநலம்
என்பது பல சமூக அரசியல் காரணிகளாலும், உயிரியல் காரணிகளாலும்
நிர்ணயிக்கப்படுகின்றது. பாதகமான சமூக பொருளாதார நிலைமை என்பது ஒருவருடைய
மனநலத்தினைப்; பாதிக்கச் செய்கின்றது. பாலியல் து~;பிரயோகத்திற்கு உட்படுதல் மற்றும்
வன்முறைகளுக்கு ஆளாகுதல் என்பன மனநலத்தினைப் பாதிக்கச் செய்கின்றன.
விரைவாக ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற சமூக மாற்றங்கள், நெருக்கடிகள் நிறைந்த
வாழ்க்கை முறைகள், சமூகத்தினால் விலத்;தி வைக்கப்படுதல் மற்றும் பாகுபாட்டுக்கு உட்படுதல்
போன்றனவும் மனநலத்தினைப்; பாதிக்கச் செய்கின்றன. அதேபோல் பரம்பரை காரணிகள்,
ஆளுமைக் கோலங்கள் உளவியல் காரணிகளும் மனநலத்தில் பாதிப்புக்குரிய ஏது நிலையைத்
தோற்றுவிக்கின்றன.
ஒருவருடைய மன ஆரோக்கியம் என்பது ஒரே மாதிரியானதாக வாழ்நாள் முழுவதும்
அமையமுடியாது. அது பருவகாலம் போல ஆரோக்கியமானதாகவும் சில சந்தர்ப்பங்களில்
ஆரோக்கியமற்றதாகவும் அல்லது ஆரோக்கியம் குன்றியதாகவும் அமைந்து காணப்படலாம்.
உச்சமான மனநலம் ஒருவித மாற்றமும் இல்லாது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்பது ஒரு
மாயை. மனநலம் மாற்றக்கூடிய ஒன்றாக அல்லது மேம்படுத்தக் கூடிய ஒன்றாக இருப்பதனால்
அதனை நாம் சில பல நடவடிக்கைகள் மூலம் மேம்படுத்திடலாம். அதனை உச்சமான நிலைக்கு
இட்டுச் செல்லலாம். மனநலம் என்பது முழுமையாக இருக்கும் அல்லது முற்றாகவே இல்லை
என்கின்ற நிலையில் அமைவது இல்லை. எனவே மன ஆரோக்கியமும் மனநோயும்
இருமுனைவுகளாக்கப்பட முடியாதவை. மன ஆரோக்கியம் அற்று ஒருவர் இருப்பது என்பது
மனநோய் ஆகிவிடமுடியாது அதே போல ஒருவர் மனநோய்க்கு ஆளாகிவிட்டால் அவருக்கு
எவ்விதமான மனஆரோக்கியமும் காணப்படவில்லை எனக் கொள்ளமுடியாது.
மனநோய்க்குட்பட்டவர்களிலும் மன ஆரோக்கிய செயற்பாடு காணலாம். அதேபோல்
மனஆரோக்கியத்தில் பல பிரச்சினை கொண்ட ஒருவருக்கு மன நோய்கள் காணப்படாமலும்
விடலாம்.
நிறைவான மனநலம் என்பது
1. முழுமையான திறன்;களை, ஆற்றல்களை அறிதல்
2. நெருக்கீடுகளுக்கு ஆரோக்கியமாக முகம் கொடுத்தல்
3. உற்பத்தி ஆக்க செயற்பாடுகளில் ஈடுபடுதல்
4. உபயோகமான வழிகளில் சமூகத்திற்கு உதவுதல்
அதன் காரணங்களாக அமைவன
1. உணர்ச்சி
2. சிந்தனை
3. சமூக செயற்பாடு
4. இணைப்பு
மூளையினுடைய தொழிற்பாடு மேற்கூறியவற்றை மாற்றமடையச் செய்கிறது இக்கூறுகளினூடாக
ஒருவர் அடையக்கூடியது
1. உணர்ச்சிகளை அறிதலும் வெளிப்படுத்தலும்
2. கற்றுக் கொள்ளும் ஆற்றல்
3. உறவுகளைப் பேணல்
4. நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்ளல்
மனதிற்கும் உடலிற்கும் இடையே காணப்படுகின்ற ஒருமைப்பாடு என்பது மன
ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கின்ற நிலையாகும்.
மனநோய்கள் ஒருவருடைய அக மற்றும் சமூக நிலைகளில் நெருக்கடிகளைத்
தோற்றுவிக்கக்கூடியன. அது அவனுடைய செயற் பாட்டுத் திறமைகளையும் பாதிப்படையச்
செய்யும் சாதாரண நெருக்கீடுகளுக்கு முகம்கொடுக்கின்ற போது ஏற்படுகிற துக்கம் மனநோயாக
கொள்ள முடியாது அதேபோல பிறழ்வு நடத்தைக் கோலங்கள் எல்லாவற்றையும் மன
நோய்களாகக் கொள்ளமுடியாது. ஒரு மனிதனுடைய சாதாரண தொழிற்பாட்டுத் திறனை
அசாதாரணமாகப் பாதிப்படையச் செய்யும் போதே மனநோயாகக் கொள்ளப்படுகிறது.
மனநலம் பற்றி தெளிவான பார்வை மிகவும் அவசியமானது. இதில் மிகமுக்கியமான
சொற்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை.
1. மனநோய்கள்
2. மனநலப் பிரச்சனைகள்
3. மன ஆரோக்கியம் ஃ மனச்சுகம்.
மனநோய்கள் எனப்படுவது தீர்க்கமான நோய்குணங்குறிகளைக் கொண்ட மனதின்
அல்லது மூளையின் நோய் வலுவூட்டம் பெற்ற நிலையாகும். இந்த மனநோய் என்பது
எல்லோருக்கும் ஏதோ அளவில் காணப்படும் என்பது அதிகப்பிரசங்கித்தனமாகும். நோய்கள்
அதற்குரிய குணங்குறிகள் குறிப்பிட்ட காலம் நீடித்திருக்கும் பட்சத்திலே அது நோயாகக்
கொள்ளப்படும். அதனால் அந்த நபருடைய அன்றாட நிகழ்வுகள் பெருமளவில்
பாதிக்கப்படுகின்றன. அவருடைய செயற் பாடுகள் பிறழ்விற்கு உட்படுகின்றன. இத்தகைய
நிலையை முறையான சிகிச்சைக்கூடாகவே குணப்படுத்தலாம் அல்லது கட்டுக்குள் கொண்டு
வரலாம். இத்தகைய நோய்கள் பல காரணிகளால் ஏற்படுத்தப்படுக்கின்றன.
மனநலப் பிரச்சினைகள் என்பது நெருக்கடி மிகுந்த நிலையில் ஏற்படும் மாற்றங்களைக்
குறிப்பிடலாம். பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் போது அதனைக் கையாள்கின்ற ஆற்றல்,
உணர்ச்சிகளைக் குறிப்பாக வெளிப்படுத்தல், தீர்க்கமான முடிவுகளை எடுத்தல் மனதினைச்
சீர்செய்து திடமாக்குதல் எனப்பல விடயங்களைக் கொண்டுள்ளது. நெருக்கடி மிகுந்த வாழ்க்கை
முறையில் பல சந்தர்ப் பங்களில் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொள்ளுகின்றோம். பெரும்
பாலான மனநலப் பிரச்சினைகள் உடல் உபாதைகளாக வெளிப்படுகின்ற மாணவன் பாடசாலைக்குச் செல்லுமுன்
வயிற்று வலியினால் உபாதைக்குட்படுவதை அவதானிக்கின்றோம். இத்தகைய மனநலப்
பிரச்சனைகள் யாவற்றிற்கும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றில்லை. சிலவேளைகளில்;
உதவி தேவைப்படலாம். கிரமமாக இத்தகைய மனநலப் பிரச்சினைகளை ஆரோக்கியமாகக்
கையாள்வதன் மூலம் திர்த்துக் கொள்கின்றோம். பல நெருக்கீடுகள் ஒரே நேரத்தில் தாக்கம்
செலுத்தும் போதும் தாங்குதிறன் பாதிக்கப்பட்டு வளப்பற்றக் குறைகளுடன் இருக்கும் போதும்
பிறரின் உதவி அவரது சிகிச்சைக்குத்; தேவைப்படலாம்.
மன ஆரோக்கியம் என்பது ஏற்படும் நெருக்கடிகளை சாதகமாகக் கையாண்டு திறன்
விருத்திகளினூடாக வினைத்திறனாகத் தொழிற்பட்டு மனத்திருப்தியுடன் சீரான வாழ்க்கையை
மேற்கொள்வதனைக் குறித்து நிற்கின்றது. இது எந்நாளும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்
என்றில்லை இதில் ஏற்ற இறக்கங்கள் காணப்படலாம். ஆனாலும் பெரும்பாலான
சந்தர்ப்பங்களில் ஒரு சீரானதாக அமைந்து காணப்படும். இத்தகைய மேன்மை ஆரோக்கிய
நிலையைக் கையாளுவதற்கு சில நுட்பமான விடயங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள நேரிடும்.
தன்னையறிய சரியான கணிப்பு மற்றும் சுயநம்பிக்கை கொண்டிருப்பது அவசியமாகின்றது.
மற்றவர்களைப் புரிந்து கொண்டு அவர்களுடன் சுமூகமான உறவினைக் கையாளக்கொள்ளக்
கூடியதாக இருத்தல் இதைவிட வேலை, பொழுதுபோக்கு, ஓய்வு என்பனவற்றை சரியான
அளவில் செயற்படுத்தல், மாற்றங்களை ஏற்றுக்கொள்கின்ற நிலைமை என்பனவும் அமைகின்றன.
மேலும் நிறைவு கொள்ளல், மகிழ்ச்சியாகப் பொழுதுகளைக் கழித்தல், நெருக்கீடுகளைக்
கையாளுதல், வாழ்க்கையை ஒரு இலக்கோடு கொண்டு செல்லல் என்பனவும்; அமைகின்றன.
இத்தகைய செயற்பாடுகள் எம்மில் இயற்கையாகக் காணப்படுகின்ற போதும் இவற்றை தேவைக்
கேற்ப கற்று அதில் தேர்ச்சி அடைந்து திறன்களை வளர்த்து மன ஆரோக்கியத்தை
மேம்படுத்தலாம்.
மனநலத்தை மேம்படுத்தல்
மனஆரோக்கியத்தினை ஏற்படுத்துவதற்கு நாம் சில விடயங்களில் மாற்றங்கள் ஏற்படுத்த
வேண்டியுள்ளது. அவையாவன:
1. நமக்குரிய பெறுமதியை வழங்குதல்: பல சந்தர்ப்பங்களில் நம்மை வெறுக்கக்
கற்றுக்கொள்கின்ற நிலைமை காணப்படுகின்றது. எம்மை நாம் விரும்பக் கற்று கொள்வது
இன்றியமையாததாகும். இது சுயநலம் சார்ந்த தனக்காக எல்லாவற்றையும் செய்வதல்ல.
தன்னை ஏற்றுக்கொண்டு சரியான கணிப்பினைப் பெற்றுக் கொள்ளலாம் அதாவது குறை
நிறைகளுடன் தன்னை ஏற்றுக் கொள்ளல்.
2. உடல் ஆரோக்கியத்தினைப் பேணுதல்: ஆரோக்கியமான உடலில் தான் ஆரோக்கியமான
மனநிலை பெறமுடியும் எனவே சத்துள்ள உணவுகளை உட்கொண்டு முறையான உடற்
பயிற்சிகளை மேற்கொள்வது என்பது இன்றியமையாததாகும்;;. புகைத்தல், மது அருந்துதல்
என்பனவற்றைக் கைக்கொள்ளாது நன்கு நீரைப்பருகி தேவையான உறக்கத்தை
மேற்கொள்ளுதல் அவசியமாகும்.
3. நெருக்கீடுகளுக்கு முகம் கொடுத்தல்: வாழ்க்கையில் பல நெருக்கீடுகள் என்பது
தவிர்க்கப்பட முடியாதவை. இந்த நெருக்கீடுகளுக்கு ஆரோக்கியமாக முகம் கொடுத்தல்
அவசியமாகின்றது. நெருக்கடி களின் போது சிலர் மது அருந்தும் பழக்கத்தைக்
கைக்கொள்கின்றனர். இன்னும் சிலரோ தற்கொலை முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.
இவை யாவும் ஆரோக்கியமற்ற எதிர்கொள்ளலாகும். ஆரோக்கியமான எதிர்கொள்ளலை
மேற்கொள்பவர்கள்; நண்பர் களிடம் ஆலோசனை பெறுகின்றனர். ஆன்மீக செயற்பாடுகளை
மேற்கொள்ளுகின்றனர். இன்னும் சிலரோ உளநல ஆலோசகரிடம் பிரச்சினைகளை
மனம்விட்டுக் கலந்துரையாடுகின்றனர். எனவே எமக்குரிய ஆரோக்கியமான எதிர்கொள்ளும்
ஆற்றலை விருத்தி செய்ய வேண்டியது அவசியமாகிறது.
4. மன அமைதிக்கான வழிமுறைகள்: பரபரப்பும் நெருக்கடிகளும் நிறைந்த வாழ்க்கை என்பது
மனிதனில் பெருமளவில் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இதனால் மனம் சஞ்சலப்பட்டு எமது
ஆரோக்கியம் பாதிப்படைகிறது. இவற்றைத் தவிர்ப்பதற்கு நாம் முறையான ஓய்வினைப்
பெற வேண்டியுள்ளது. அந்த ஓய்வினை ஆக்க பூர்வமான செயற்பாடுகளின் மூலம் மேன்மை
அடையச் செய்யலாம். உடற்பயிற்சிகள் அமைதிக்கு வழிவகுக்கின்றன. யோகா, தியானம்,
மந்திர உச்சாடனம், பிரணாயாமம், போன்ற பலவகையான மனதினைச் சாந்தப்படுத்துகின்ற
செயற்பாடுகளை மேற்கொள்ளலாம்.
5. யதார்த்தமான இலக்குகளை ஏற்படுத்தல்: பல சந்தர்ப்பங்களில் நாம் மிக உயர்ந்த
இலக்குகளை எமது இலட்சியமாகக் கொள்கின்றோம். உயர்ந்த இலட்சியத்தைக்
கொண்டிருப்பது ஆரோக்கியமானதும் தேவையானதுமாகும். ஆனாலும் அந்த இலக்கு
நடைமுறைச் சாத்தியமாக அமையக்கூடியதாக இருத்தல் அவசியம். அவ்வாறு இல்லாவிடின்
விரக்தியும் தோல்வி மனப்பான்மையும் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாது. சில வேளைகளில்
பெரிய ஒரு இலக்கினைப் பகுதி பகுதியாக அடைவதற்குரிய நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும். சிறு சிறு இலக்குகளாகப் பிரித்து அடைய முற்படுவோ மாயின்
அவை சாத்தியமாவதுடன் எமக்குள் திருப்தியையும் ஏற்படுத்துகிறது.
6. பிறருக்கு தன்னார்வத்துடன் உதவுதல்: மற்றவர்களுக்கு முன் நிபந்தனைகள் இன்றி
உதவும்போது மனம் ஆனந்தம் அடைகிறது. அத்துடன் தான் பெறுமதியுடையவன் என்ற
உணர்வினை ஏற்படுத்துகின்றது. இந்த உதவி உறவினர்களாகட்டும் அல்லது முன்பின்
தெரியாதவர்களாகட்டும் அதனைக் கிரமமாகச் செய்யும் போது மனம் மகிழ்ச்சி அடைவதுடன்
மன ஆரோக்கியத்தினைப் பெறுகின்றது. தன்னார்வத்துடன் செயற்படும் போது சமூக
இணைப்புக்களை ஏற்படுத்துவதுடன் சுயகணிப்பினையும் மேம்படச் செய்கிறது. இது பல
திறன்களின் விருத்திக்கும் வித்திடுகின்றது. நாம் சமூகத்தின் ஓர் அங்கமாக உணர்கின்ற
நிலைமையும் தோற்றுவிக்கப்படுகின்றது. மற்றவர்களுடன் சேர்ந்து செயற்படுகின்ற போது
குழுவாக ஒரு இணக்கப்பாட்;டுடன் செயற்படுகின்ற ஆற்றலையும் பெறமுடிகிறது.
இத்தகைய செயற்பாடுகளை இளையர் மேற்கொள்ளும் போது அவர்களது மனஆரோக்கியம்
மேம்படுகிறது. இதனைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஊக்கப்படுத்துவதுடன் அவர்களின்
மன ஆரோக்கி யத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். வெறுமனே இலாபம் கருதிய
மனப்பாங்குடன் பரீட்சையில் சித்தி என்ற ஒற்;றை இலக்குடன் இயங்கும்போது மனநலப்
பாதிப்புக்கள் அதிகரிக்கின்றன. பிள்ளைகளின் ஆளுமை வளர்ச்சிக்கும் மகிழ்வான வாழ்தலுக்கும்
முன்னுரிமை நாம் வழங்காவிட்டால் எமது எதிர்காலம் இருள்மயமானதாகிவிடும். பிள்ளைகள்
பிரச்சினை ஏற்படுகின்ற போது மற்றவர்களின் உதவியைப் பெறுவதற்கு அவர்களைப்
பழக்கப்படுத்தி விடவேண்டும். பிரச்சினை களுக்குத் தனியே முகம் கொடுக்கும் போது நன்கு
விருத்தியடையாத மூளையினைக் கொண்டுள்ள இளையரிற்கு அது முடியாமல் போகலாம்
அல்லது பாதகமான விளைவினைத் தரலாம் எனவே உதவியைப் பெறுதல் என்பது
பலவீனமானதல்ல என்பதும் அதனைப் பெற்றுக் கொண்டு பிரச்சினையைக் கடந்து செல்வதே
ஆற்றல் மிக்கவருடைய செயற்பாடு என்பதை அவர்களிடம் விதைக்க வேண்டியது
பெற்றோரினதும் ஆசிரியர்களினதும், தலையாய கடமையாக அமைகிறது.
மருத்துவர் எஸ். சிவதாஸ்
உள மருத்துவ நிபுணர்
யாழ் போதனா வைத்தியசாலை
One comment
A WordPress Commenter
July 2, 2024 at 2:54 pm
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.