READ OUR BLOGFrom Our Arumpukal

bt_bb_section_bottom_section_coverage_image
https://arumpukal.com/wp-content/uploads/2021/12/floating_image_01.png
https://arumpukal.com/wp-content/uploads/2021/12/floating_image_02.png
https://arumpukal.com/wp-content/uploads/2021/12/floating_image_03.png
இழப்பும் உயிர்ப்பும்

பதினாறு வயது நிரம்பிய இந்தச் சிறுமி பிறந்து வன்னி பெருநிலப்பரப்பின் முக்கியமான ஒரு ஊரில். தாய்வழிப் பூர்வீகம் கண்டல் கடல் கொண்ட முன்னரங்கக் காவலரண்கள் அமைக்கப்பட்டிருந்த கிராமம், போரும் இடப்பெயர்வுகளும் அலைக்கழித்த வாழ்க்கை இவர்களுக்கானது. கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டபின் இவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர். வறுமையின் கொடுமையிலும் மனம் தளராது கூலித்தொழில் செய்து குடும்பத்தைக் காத்தனர் பெற்றோரும் உற்றோரும். இலங்கையின் ஐம்பதாவது குடியரசு தினமன்று மாலை அந்தக் கிராமத்தில் ஒரு பண்ணையில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர் பெற்றோரும் –...

அரும்புகள்

அரும்புகள் என்னும் சிறுவர் உளநலப் பிரிவு 2022ஆம் ஆண்டு தைப்பிறப்புடன் ஆரம்பமானது. இதன் முக்கிய பணிகள் யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படுகின்றது. இதன் நோக்கம் சிறார்களை அவர்களின் நிலையிலிருந்து புரிந்து கொண்டு அவர்களின் ஆற்றலை மேம்படுத்தலும், வலுப்படுத்தலும் ஆகும். இம்முறை சிறுவர்களைப் பலவீனப்படுத்தி சிகிச்சைக்குட்படுத்துகின்ற வழக்கமான அணுகுமுறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. குழந்தைகளின் ஆற்றலை மேம்படுத்துவதென்பது அவர்களுடன் மட்டும் சார்ந்த விடயமல்ல. பெற்றோர்களினதும் ஆசிரியர்களினதும் பங்களிப்பு இங்கு முக்கியமானதாக அவதானிக்கப்படுகின்றது. எனவே தான் நாம் மூன்று தரப்பினருடனும் இணைந்து...

இளையர் மனநலம்

தேர்த்திருவிழாவுக்கு செல்ல சேலை வாங்கித் தராததால் மாணவி தற்கொலை (வீரகேசரி (12.06.18) அன்று வெளியான செய்தி பின்வருமாறு அமைந்திருந்தது.)   யாழ்ப்பாணத்தில் ஆலயத் தேர்த் திருவிழாவுக்குச் செல்ல சேலை வாங்கித்தராததால்விரக்தியடைந்த 18 வயதான மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார்தெரிவித்தனர். கொடிகாமம் எருவனில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம்இடம்பெற்றுள்ளது. வரணிசிட்டிவேரம் கண்ணகை அம்பாள் ஆலயத்தின் தேர்த்திருவிழாசனிக்கிழமை நடைபெற்றது. சக தோழிகள் சேலையுடன் வருவதால் தனக்கு சேலை வாங்கித்தருமாறு தாயாரிடம் கேட்டுள்ளார். எனினும் அதற்கு தாயார் மறுத்ததனால்...